திருட்டு வழக்கில் 3 பேருக்கு 3 ஆண்டு ஜெயில் தண்டனை
திருட்டு வழக்கில் 3 பேருக்கு 3 ஆண்டு ஜெயில் தண்டனை விதிக்கப்பட்டது.
சிவகாசி,
திருத்தங்கல் ஸ்டேண்டர்டு காலனியை சேர்ந்தவர் வீரணன். சிவகாசி பாரதிநகரை சேர்ந்தவர் சேர்மராஜ். இவர்களின் வீடுகளில் நாரணாபுரம் ரோட்டில் உள்ள போஸ் காலனியை சேர்ந்த சரோஜா (வயது 52) என்பவர் வீட்டு வேலை செய்து வந்ததாக கூறப்படுகிறது. அப்போது 2 பேரின் வீட்டில் இருந்தும் நகைகளை திருடியதாக புகார் கூறப்பட்டது. இது குறித்து சிவகாசி டவுன் போலீசார் வழக்குபதிவு செய்து சரோஜா, தங்கராஜ், செல்வராஜ் ஆகியோரை கைது செய்தனர். பின்னர் இந்த வழக்கு சிவகாசி மாஜிஸ்திரேட் கோர்ட்டில் நடைபெற்று வந்தது. வழக்கை விசாரித்த மாஜிஸ்திரேட் ராஜேஷ்கண்ணன், இந்த திருட்டு வழக்கில் ஈடு பட்ட சரோஜா, தங்கராஜ், செல்வராஜ் ஆகியோருக்கு தலா 3 ஆண்டு ஜெயில் தண்டனையும், ரூ.1000 அபராதமும் விதித்து தீர்ப்பு கூறினார்.