டாக்டரை தாக்கியவர்களுக்கு 3 ஆண்டு சிறை தண்டனை - செசன்சு கோர்ட்டு தீர்ப்பு
டாக்டரை தாக்கியவர்களுக்கு 3 ஆண்டு சிறை தண்டனை விதித்து சென்னை செசன்சு கோர்ட்டு தீர்ப்பு வழங்கியது.;
சென்னை அரசு பொது மருத்துவமனையில் சூப்பிரண்டாக பணியாற்றி ஓய்வு பெற்றவர் டாக்டர் இளங்கோவன். இவர், கே.கே.நகரில் தனியாக ஆஸ்பத்திரி தொடங்கி நடத்தி வருகிறார். 2-வது தளத்தில் குடும்பத்துடன் வசித்து வருகிறார். கடந்த 2014-ம் ஆண்டு ஜனவரி 5-ந்தேதி அதிகாலை சுமார் 4 மணிக்கு இவரது ஆஸ்பத்திரிக்கு வந்தவர்கள், கையில் காயம் ஏற்பட்டுள்ளதாகவும், சிகிச்சை அளிக்க வேண்டும் என்று கூறியுள்ளனர். டாக்டர் இளங்கோவன் வெளியில் வந்ததும், அந்த கும்பலை சேர்ந்தவர்கள் கொடூரமாக தாக்கியுள்ளனர். சத்தம் கேட்டு வெளியில் வந்த இளங்கோவனின் மகனை தாக்கியுள்ளனர்.
இதுகுறித்து கே.கே.நகர் போலீசார் விசாரணை நடத்தி, மற்றொரு தனியார் மருத்துவமனை கல்லூரி உரிமையாளர் மகன் கோகுலகிருஷ்ணன் (வயது 27), அவரது கூட்டாளிகல் அலெக்ஸ், அறிவழகன், ஹரி, தினேஷ், சதீஷ், கணேஷ் பிரபு, ஜெயகாந்த் ஆகியோர் மீது வழக்குப்பதிவு செய்தனர். இந்த வழக்கு சென்னை மாவட்ட முதலாவது கூடுதல் செசன்சு கோர்ட்டில் விசாரிக்கப்பட்டது. இந்த வழக்கை விசாரித்த நீதிபதி வி.தங்க மாரியப்பன், போலீசார் கூறும் குற்றச்சாட்டுகள் போதிய ஆதாரங்களுடன் நிரூபிக்கப்பட்டுள்ளது. எனவே, கோபாலகிருஷ்ணன் உள்பட 8 பேருக்கும் தலா 3 ஆண்டுகள் சிறைத்தண்டனையும், மொத்தம் ரூ.48 ஆயிரம் அபராதமும் விதித்து தீர்ப்பு அளித்தார்.