பத்திரப்பதிவு துறை முன்னாள் பதிவாளருக்கு 3 ஆண்டு சிறை

பத்திரப்பதிவு துறை முன்னாள் பதிவாளருக்கு 3 ஆண்டு சிறை

Update: 2023-02-06 18:45 GMT

கோவை

கோவை சாய்பாபா காலனியை சேர்ந்தவர் மருதாசலம்(வயது 70). இவர் கரூர் மாவட்ட பத்திரப்பதிவு துறையில் மாவட்ட பதிவாளராக பணியாற்றி ஓய்வு பெற்றார். இந்த நிலையில் மருதாசலம் வருமானத்திற்கு அதிகமாக சொத்து சேர்த்ததாக புகார் அளிக்கப்பட்டது. இது தொடர்பாக கடந்த 7-3-2003 அன்று கோவை லஞ்ச ஒழிப்பு போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். விசாரணையில் அவர், கடந்த 1998-ம் ஆண்டில் இருந்து 2002-ம் ஆண்டு வரை அதிகளவில் சொத்துக்களை வாங்கியிருப்பது தெரியவந்தது. இதன் மூலம் ரூ.23 லட்சத்து 51 ஆயிரத்து 916 வருமானத்துக்கு அதிகமாக சேர்த்ததாக கூறப்படுகிறது. அதாவது 299 சதவீதம் கூடுதலாக வருமானம் குவித்தது விசாரணையில் கண்டுபிடிக்கப்பட்டது. இந்த வழக்கில் அரசு தரப்பில் 22 சாட்சிகளிடம் விசாரணை நடத்தப்பட்டது. கோவை சி.ஜே.எம் கோர்ட்டில் நடந்த வழக்கை விசாரித்த சிறப்பு நீதிபதி எஸ்.இந்துலதா, குற்றம் சாட்டப்பட்ட மருதாசலத்திற்கு 3 ஆண்டு சிறை தண்டனை மற்றும் ரூ.50 ஆயிரம் அபராதம் விதித்து தீர்ப்பளித்தார்.

Tags:    

மேலும் செய்திகள்