லஞ்சம் வாங்கிய அதிகாரிக்கு 3 ஆண்டு சிறை தண்டனை

லஞ்சம் வாங்கிய அதிகாரிக்கு 3 ஆண்டு சிறை தண்டனை விதித்து திருச்சி கோர்ட்டு உத்தரவிட்டுள்ளது.

Update: 2022-11-25 19:52 GMT

லஞ்சம் வாங்கிய அதிகாரிக்கு 3 ஆண்டு சிறை தண்டனை விதித்து திருச்சி கோர்ட்டு உத்தரவிட்டுள்ளது.

ஆய்வாளர்

திருச்சி கொட்டப்பட்டு இந்திராநகரை சேர்ந்தவர் சக்கரவர்த்தி. இவர் திருச்சி குண்டூரில் நிலம் ஒன்றை வாங்கி இருந்தார். இவர், தனது நிலத்தை சர்வே செய்து தர திருச்சி தாலுகா அலுவலகத்தில் உள்ள துணை சர்வே வட்ட ஆய்வாளர் கணேசமூர்த்தியை கடந்த 2007-ம் ஆண்டு அணுகினார்.

சர்வே செய்து வீட்டுமனை பட்டா வழங்க கணேசமூர்த்தி, சக்கரவர்த்தியிடம் ரூ.1,000 லஞ்சம் கேட்டதாக கூறப்படுகிறது. லஞ்சம் கொடுக்க விரும்பாத சக்கரவர்த்தி இது குறித்து திருச்சி லஞ்ச ஒழிப்பு போலீசில் புகார் அளித்தார். அதன் பேரில் லஞ்ச ஒழிப்பு போலீசார் வழக்குப்பதிவு செய்து கண்காணித்தனர்.

3 ஆண்டு சிறை

அப்போது, கணேசமூர்த்தி லஞ்ச பணத்தை வாங்கியபோது, மறைந்து இருந்த போலீசார் அவரை கையும், களவுமாக பிடித்து கைது செய்தனர். இது தொடர்பான வழக்கு திருச்சி ஊழல் தடுப்பு சிறப்பு கோர்ட்டில் நடைபெற்று வந்தது. இந்த வழக்கில் நீதிபதி நேற்று தீர்ப்பு கூறினார். அதில், கணேசமூர்த்திக்கு 3 ஆண்டுகள் சிறை தண்டனையும், ரூ.20 ஆயிரம் அபராதமும் விதித்து இருந்தார்.

Tags:    

மேலும் செய்திகள்