கேரளாவுக்கு கடத்த முயன்ற 3½ டன் ரேஷன் அரிசி பறிமுதல்

தக்கலை அருகே வெவ்வேறு சம்பவங்களில் கேரளாவுக்கு கடத்த முயன்ற 3½ டன் ரேஷன் அரிசி பறிமுதல் செய்யப்பட்டது.

Update: 2022-10-20 18:45 GMT

தக்கலை, 

தக்கலை அருகே வெவ்வேறு சம்பவங்களில் கேரளாவுக்கு கடத்த முயன்ற 3½ டன் ரேஷன் அரிசி பறிமுதல் செய்யப்பட்டது.

வாகன சோதனை

தக்கலையில் உள்ள கல்குளம் வட்ட வழங்கல் அலுவலர் சுனில்குமார் மற்றும் அதிகாரிகள் நேற்று காலையில் சுங்கான்கடை பகுதியில் வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்ேபாது அந்த வழியாக வந்த சொகுசு காரை நிறுத்துமாறு சைகை காட்டினர். ஆனால் கார் நிற்காமல் சென்றது. உடனே அதை அதிகாரிகள் வாகனத்தில் துரத்தி சென்றனர். சிறிது தூரம் சென்றதும் காரை நிறுத்தி விட்டு டிரைவர் இறங்கி தப்பி ஓடினார். தொடர்ந்து காரை சோதனையிட்ட போது அதில் 1½ டன் ரேஷன் அரிசி இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. விசாரணையில் இந்த அரிசி கேரளாவுக்கு கடத்த முயன்றது தெரிய வந்தது. இதையடுத்து காரையும், அரிசியையும் அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.

ஆட்டோ- டெம்போ

தொடர்ந்து அழகியமண்டபம் பகுதியில் ஆட்டோவில் கேரளாவுக்கு கடத்த முயன்ற 500 கிலோ ரேஷன் அரிசியை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர். அத்துடன் ஆட்டோவும் பறிமுதல் செய்யப்பட்டது.

இதுபோல், தக்கலை தபால் நிலையம் அருகில் வாழைக்குலை ஏற்றி வந்த ஒரு மினி டெம்போவை நிறுத்தி சோதனையிட்டனர். அப்போது வாழை குலைகளுக்கு அடியில் 1½ டன் ரேஷன் அரிசி யை மறைத்து வைத்து கடத்தி வந்தது கண்டுபிடிக்கப்பட்டது. இதையடுத்து ரேஷன் அரிசியையும், டெம்போவையும் அதிகாரிகள் பறிமுதல் செய்தனர். பறிமுதல் செய்யப்பட்ட வாகனங்களை தக்கலையில் உள்ள கல்குளம் வட்டவழங்கல் அலுவலகத்திலும், அரிசியை உடையார்விளையில் உள்ள அரசு குடோனிலும் ஒப்படைத்தனர்.

Tags:    

மேலும் செய்திகள்