கேரளாவுக்கு கடத்த முயன்ற 3 டன் ரேஷன் அரிசி பறிமுதல்

குமரி மாவட்டத்தில் வெவ்வேறு சம்பவங்களில் கேரளாவுக்கு கடத்த முயன்ற 3 டன் ரேஷன் அரிசி பறிமுதல் செய்யப்பட்டது.

Update: 2022-09-24 18:45 GMT

நாகர்கோவில், 

குமரி மாவட்டத்தில் வெவ்வேறு சம்பவங்களில் கேரளாவுக்கு கடத்த முயன்ற 3 டன் ரேஷன் அரிசி பறிமுதல் செய்யப்பட்டது.

இந்த சம்பவங்கள் குறித்த விவரம் வருமாறு:-

வாகன சோதனை

பளுகல் சப்-இன்ஸ்பெக்டர் விஜயகுமார் தலைமையில் போலீசார் கண்ணுமாமூடு சோதனைச்சாவடியில் வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது அந்த வழியாக வந்த காரை மடக்கி நிறுத்தினர். உடனே காரை நிறுத்தி விட்டு டிரைவர் இறங்கி தப்பி ஓட முயன்றார். அவரை போலீசார் மடக்கி பிடித்தனர்.

ெதாடர்ந்து காரை சோதனையிட்ட ேபாது அதில் 1 டன் ரேஷன் அரிசி இருந்தது. இந்த அரிசி கேரளாவுக்கு கடத்த முயன்றது தெரிய வந்தது. இதையடுத்து போலீசார் காருடன் ரேஷன் அரிசியை பறிமுதல் செய்தனர். பறிமுதல் செய்யப்பட்ட அரிசியை காப்புக்காடு அரசு குடோனிலும், காரை விளவங்கோடு தாலுகா தாலுகா அலுவலகத்திலும் ஒப்படைத்தனர். இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து கார் டிரைவர் மணலிக்கரையை சேர்ந்த ஜெய்சனை கைது செய்தனர்.

முன்சிறை

கிள்ளியூர் வட்ட வழங்கல் அலுவலர் வேணுகோபால் தனிப்பிரிவு போலீஸ்காரர் சுனில் மற்றும் ரமேஷ் ஆகியோர் நேற்று மதியம் முன்சிறை பகுதியில் வாகன சோதனையில் ஈடுபட்டனர்.

அப்போது அந்த வழியாக வந்த கேரள பதிவெண் கொண்ட கார் நிற்காமல் வேகமாக சென்றது.

உடனே அவர்கள் அந்த காரை விரட்டி மடக்கிப் பிடித்த போது டிரைவர் தப்பி ஓடி விட்டார். பின்னர் காரை சோதனை செய்ததில் சுமார் 1 டன் ரேஷன் அரிசி இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. தொடர்ந்து காருடன் அரிசி பறிமுதல் செய்யப்பட்டது.

தேங்காப்பட்டணம்

இதுபோல், கிள்ளியூர் வட்ட வழங்க அலுவலர் வேணுகோபால் மற்றும் வருவாய் துறை ஊழியர்கள் தேங்காப்பட்டணம் அருகே உள்ள அம்சி பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது அந்த வழியாக காரில் கேரளாவுக்கு கடத்த முயன்ற 1 டன் ரேஷன் அரிசியை பறிமுதல் செய்தனர்.

Tags:    

மேலும் செய்திகள்