கஞ்சா கடத்திய 3 வாலிபர்கள் கைது

திண்டுக்கல்லில் ஆட்டோவில் கஞ்சா கடத்திய 3 வாலிபர்களை போலீசார் கைது செய்தனர்.

Update: 2023-07-30 19:45 GMT

திண்டுக்கல் பகுதியில் தெற்கு போலீஸ் இன்ஸ்பெக்டர் இளஞ்செழியன் தலைமையில் போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது ஒத்தக்கண் பாலம் அருகே வந்த ஆட்டோவை நிறுத்தி சோதனையிட்டனர். அதில் பின்பக்க இருக்கைக்கு அடியில் ஒரு பை இருப்பதை போலீசார் பார்த்தனர். உடனே அதனை எடுத்து பார்த்த போது அதில் 1 கிலோ 100 கிராம் கஞ்சா இருப்பது தெரியவந்தது. இதையடுத்து ஆட்டோவை ஓட்டி வந்த நாகல்நகரை சேர்ந்த மதன்குமார் (வயது 32), ஒத்தக்கண்பாலம் கருப்பசாமி கோவில் தெருவை சேர்ந்த நாகராஜ் (24), தோட்டனூத்தை அடுத்த மேட்டூர் காலனியை சேர்ந்த அஜித்குமார் (22) ஆகியோரை பிடித்து போலீசார் விசாரித்தனர். விசாரணையில் அவர்கள் ஆட்டோவில் விற்பனைக்காக கஞ்சா கடத்தி வந்ததை ஒப்புக்கொண்டனர். இதையடுத்து அவர்களை போலீசார் கைது செய்தனர். மேலும் ஆட்டோவையும் பறிமுதல் செய்தனர்.

Tags:    

மேலும் செய்திகள்