கோவிலுக்கு சென்று திரும்பிய பெண்ணிடம் 3½ பவுன் தாலி செயின் பறிப்பு

கோவிலுக்கு சென்று திரும்பிய பெண்ணிடம் 3½ பவுன் தாலி செயின் பறித்த மர்ம நபர்களை போலீசார் தேடி வருகின்றனர்.

Update: 2022-12-21 19:23 GMT

அரக்கோணம் கிருபில்ஸ்பேட்டையை சேர்ந்தவர் விமலா (வயது 58). இவரது உறவினர் குமாரி. இவர்கள் இருவரும் நேற்று முன்தினம் மாலை திருத்தணி முருகன் கோவிலுக்கு ஸ்கூட்டரில் சென்றுவிட்டு வீட்டிற்கு திரும்பி வந்து கொண்டிருந்தனர். அரக்கோணம் மங்கம்மாபேட்டை ரெயில்வே மேம்பாலத்தில் இரவு 8.30 மணியளவில் வந்த போது மோட்டார் சைக்கிளில் வந்த அடையாளம் தெரியாத மர்ம நபர்கள் விமலா அணிந்திருந்த 3½ பவுன் தாலி செயினை பறித்துக் கொண்டு தப்பி சென்றுள்ளனர்.

இது குறித்து அரக்கோணம் டவுன் போலீஸ் நிலையத்தில் விமலா அளித்த புகாரின் பேரில், போலீசார் வழக்குப் பதிவு செய்து செயினை பறித்துச் சென்ற மர்ம நபர்களை தேடி வருகின்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்