விவசாயியிடம் 3 பவுன் தங்க சங்கிலி பறிப்பு
வேப்பந்தட்டை அருகே விவசாயியிடம் 3 பவுன் தங்க சங்கிலி பறித்த மர்ம ஆசாமிகளை போலீசார் தேடி வருகிறார்கள்.
பெரம்பலூர் மாவட்டம் வேப்பந்தட்டையை அடுத்துள்ள வெள்ளுவாடி கிராமத்தை சேர்ந்தவர் முருகேசன் (வயது 42), விவசாயி. இவர் நேற்று தனது நண்பர் ஏழுமலையுடன் மொபட்டில் வெள்ளுவாடியில் இருந்து வேப்பந்தட்டைக்கு சென்று விட்டு மீண்டும் வெள்ளுவாடி நோக்கி சென்று கொண்டிருந்தார். கிருஷ்ணாபுரம் ரைஸ் மில் அருகே வந்தபோது பின்னால் மோட்டார் சைக்கிளில் வந்த மர்ம ஆசாமிகள் முருகேசன் கழுத்தில் அணிந்திருந்த 3 பவுன் தங்க சங்கிலியை பறித்துக் கொண்டு மின்னல் வேகத்தில் தப்பி சென்றனர். இது தொடர்பாக கை.களத்தூர் போலீசில் முருகேசன் கொடுத்த புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து தங்க சங்கிலியை பறித்து சென்ற மர்ம ஆசாமிகளை வலைவீசி தேடி வருகின்றனர்.