நிலப்பிரச்சினையில் வாலிபர் மீது கொலைவெறி தாக்குதலில் ஈடுபட்ட 3 பேர் குண்டர் சட்டத்தில் கைது

நிலப்பிரச்சினையில் வாலிபர் மீது கொலைவெறி தாக்குதலில் ஈடுபட்ட 3 பேர் குண்டர் சட்டத்தில் கைது செய்யப்பட்டனர்.

Update: 2022-09-10 18:04 GMT

கலசபாக்கம்

நிலப்பிரச்சினையில் வாலிபர் மீது கொலைவெறி தாக்குதலில் ஈடுபட்ட 3 பேர் குண்டர் சட்டத்தில் கைது செய்யப்பட்டனர்.

கலசபாக்கத்தை அடுத்த தென்பள்ளிப்பட்டு பகுதியைச் சேர்ந்த முருகன் (வயது 24), அதே பகுதியை சேர்ந்த பார்த்திபன் (24), பாண்டியன் (24), பில்லூர் கிராமத்தைச் சேர்ந்த விஜயகுமார் (30) ஆகியோருக்கும் இடையே கடந்த 2 மாதத்திற்கு முன்பு நிலம் சம்பந்தமான பிரச்சினையில் முன்விரோதம் இருந்து வந்துள்ளது. இந்த நிலையில் கலசபாக்கம் பஸ் நிறுத்தம் அருகில் பார்த்திபன், பாண்டியன், விஜயகுமார் ஆகிய 3 பேரும் சேர்ந்து முருகனை சரமாரியாக தாக்கி கொலை முயற்சியில் ஈடுபட்டனர்.

இதில் படுகாயம் ஏற்பட்ட முருகன் வேலூர் தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார். இச்சம்பவம் தொடர்பாக பார்த்திபன் உள்பட 3 பேரையும் கலசபாக்கம் போலீசார் கைது செய்து விசாரணை செய்து வந்தனர்.

இந்த நிலையில் பார்த்திபன், பாண்டியன், விஜயகுமார் ஆகியோரை குண்டர் தடுப்பு சட்டத்தில் கைது செய்ய கலெக்டருக்கு மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு கார்த்திகேயன் பரிந்துரை செய்தார். அதன் பேரில் 3 பேரையும் குண்டர் சட்டத்தில் கைது செய்ய கலெக்டர் முருகேஷ் உத்தரவு பிறப்பித்தார். அதன்படி பார்த்திபன், பாண்டியன், விஜயகுமார் ஆகிய 3 பேரையும் குண்டர் தடுப்பு சட்டத்தில் போலீசார் வேலூர் மத்திய சிறையில் அடைத்தனர்.

Tags:    

மேலும் செய்திகள்