தொடர் கொள்ளையில் ஈடுபட்ட 3 பேர் கைது

பந்தநல்லூர் அருகே தொடர் கொள்ளையில் ஈடுபட்ட 3 பேரை போலீசார் கைது செய்து அவர்களிடம் இருந்து ரூ.20 லட்சம் தங்க நகைகள்- வெள்ளி பொருட்களை பறிமுதல் செய்தனர்.

Update: 2023-06-13 20:24 GMT

திருப்பனந்தாள்:

பந்தநல்லூர் அருகே தொடர் கொள்ளையில் ஈடுபட்ட 3 பேரை போலீசார் கைது செய்து அவர்களிடம் இருந்து ரூ.20 லட்சம் தங்க நகைகள்- வெள்ளி பொருட்களை பறிமுதல் செய்தனர்.

தொடர் கொள்ளை

தஞ்சை மாவட்டம் பந்தநல்லூர் பகுதியில் கடந்த 3 மாதங்களாக தொடர் கொள்ளை சம்பவங்களில் ஈடுபடுபவர்களை பிடிக்க தஞ்சை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஆசிஷ் ராவத் உத்தரவிட்டார்.

அதன்படி திருவிடைமருதூர் துணை போலீஸ் சூப்பிரண்டு ஜாபர் சித்திக் மேற்பார்வையில், சப்-இன்ஸ்பெக்டர் காமராஜ் தலைமையில் போலீசார் ரமணி, கார்த்திக், முகமதுரியாஸ் ஆகியோர் கொண்ட தனிப்படை அமைக்கப்பட்டது.

தனிப்படை

தனிப்படை போலீசார் தீவிர விசாரணை நடத்தி வந்தனர். இந்த நிலையில் பந்தநல்லூர் அருகே சாய்னாபுரத்தை சேர்ந்த ஜோதிமணி மகன் ஆசைமணி (வயது24), அதே பகுதியை சேர்ந்த கருணாநிதி மகன் விக்னேஷ் (24) ஆகிய 2 பேரையும் சந்தேகத்தின் பேரில் தனிப்படை போலீசார் பிடித்து விசாரணை நடத்தினர்.

விசாரணையில் அவர்கள் 2 பேரும் கடந்த 3 மாதங்களாக பந்தநல்லூர் பகுதியில் பல்வேறு இடங்களில் ரூ. 7 லட்சம் மதிப்புள்ள தங்க நகைகள் மற்றும் வெள்ளி பொருட்களை கொள்ளையடித்தது தெரிய வந்ததது.

3 பேர் கைது

இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து ஆசைமணி, விக்னேஷ் ஆகிய 2 பேரையும் கைது செய்து அவர்களிடம் இருந்து ரூ.7 லட்சம் மதிப்பிலான தங்க நகைகள் மற்றும் வெள்ளி பொருட்களை பறிமுதல் செய்தனர்.

இதேபோல் சோழபுரம் பகுதியில் நகைகளை கொள்ளையடித்த கடலூர் மாவட்டம் சிதம்பரத்தை சேர்ந்த ரெங்கநாதன் மகன் ஆசைகுமார்(24) என்பவரை போலீசார் கைது செய்து அவரிடம் இருந்து 5 பவுன் நகைகளை பறிமுதல் செய்தனர்.

ரூ.20 லட்சம் தங்க நகைகள் பறிமுதல்

கைது செய்யப்பட்ட 3 பேரிடம் இருந்து பறிமுதல் செய்யப்பட்ட தங்க நகைகள் மற்றும் வெள்ளி பொருட்களின் மதிப்பு ரூ.20 லட்சம் இருக்கும் என கூறப்படுகிறது.

Tags:    

மேலும் செய்திகள்