காட்டன் சூதாட்டம், லாட்டரி விற்பனையில் ஈடுபட்ட 3 பேர் கைது
காட்டன் சூதாட்டம், லாட்டரி விற்பனையில் ஈடுபட்ட 3 பேர் கைது செய்யப்பட்டனர்.
திருப்பத்தூர் மாவட்டத்தில் ஆன்லைன் சூதாட்டம், காட்டன் சூதாட்டம், வெளி மாநில லாட்டரி விற்பனை நடப்பதாக மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஆல்பர்ட் ஜானுக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அதன்பேரில் 3 தனிப்படைகள் அமைத்து சூதாட்டத்தில் ஈடுபடுபவர்களை கண்காணித்து பிடிக்க உத்தரவிட்டிருந்தார்.
அதன் அடிப்படையில் வாணியம்பாடி டவுன் போலீஸ் இன்ஸ்பெக்டர் நாகராஜ் தலைமையில் நகரப்பகுதி முழுவதும் கண்காணித்து வந்தனர். இந்தநிலையில் ஷாகிராபாத் பகுதியில் காட்டன் சூதாட்டத்தில் ஈடுபட்ட சபியுல்லா (47) என்பவரை கைது செய்தனர். புதூர் பகுதியில் ஆன்லைன் மூலம் லாட்டரி விற்றதாக அதே பகுதியை சேர்ந்த பிரகாஷ் (42), சிங்கார வேலன் (29) ஆகிய இருவர்கைது செய்யப்பட்டனர்.