நாட்டு வெடிகுண்டு தயாரித்த 3 பேர் கைது

வத்திராயிருப்பு அருகே நாட்டு வெடிகுண்டு தயாரித்த 3 பேரை போலீசார் கைது செய்தனர்.

Update: 2022-09-25 20:49 GMT

வத்திராயிருப்பு, 

வத்திராயிருப்பு அருகே நாட்டு வெடிகுண்டு தயாரித்த 3 பேரை போலீசார் கைது செய்தனர்.

3 பேர் கைது

வத்திராயிருப்பு அருகே கான்சாபுரத்தில் இருந்து அத்திக்கோவில் செல்லும் சாலையில் அருணாசலம் என்பவரது தென்னந்தோப்பில் சிலர் நாட்டு வெடிகுண்டு தயாரிப்பதாக கூமாப்பட்டி போலீசாருக்கு தகவல் கிடைத்தது.

இதையடுத்து கூமாப்பட்டி சப்-இன்ஸ்பெக்டர் கணேசன், வத்திராயிருப்பு சப்-இன்ஸ்பெக்டர் பிரகஸ்பதி, ஸ்ரீவில்லிபுத்தூர் துணை போலீஸ் சூப்பிரண்டு தனிப்பிரிவு போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று சோதனை நடத்தினர். அப்போது அங்கு நாட்டு வெடிகுண்டு தயாரித்த செம்பட்டையான் காலனியை சேர்ந்த கார்த்திக் (வயது22), டேனியல் ராஜ்குமார் (22), அய்யனார்புரம் தேவராஜ் (25) ஆகியோரை கைது செய்தனர்.

வெடிகுண்டுகள் பறிமுதல்

பின்னர் அவர்களிடம் இருந்த 5 நாட்டு வெடிகுண்டுகளையும் போலீசார் பறிமுதல் செய்தனர். மேலும் கைது செய்யப்பட்ட 3 பேரையும், நாட்டு வெடிகுண்டுகளையும் ஸ்ரீவில்லிபுத்தூர் வனச்சரக அலுவலர் கார்த்திக்கிடம் போலீசார் ஒப்படைத்தனர்.

வத்திராயிருப்பு மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் நாட்டு வெடிகுண்டு தயாரிப்பது என்பது தொடர்கதையாக நடந்து வருகிறது. இதனை தடுக்க போலீசார் கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Tags:    

மேலும் செய்திகள்