மதுபானம் விற்ற 3 பேர் சிக்கினர்
தேவதானப்பட்டி பகுதியில் மதுபானம் விற்ற 4 பேரை போலீசார் கைது செய்தனர்.
தேவதானப்பட்டி அருகே ஜெயமங்கலம் பகுதியில் மதுபானம் விற்பதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. அதன்பேரில், போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் மணிகண்டன் மற்றும் போலீசார் அந்த பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது ஜெயமங்கலம்-மேல்மங்கலம் ரோட்டில் ஒத்த வீடு அருகே, வடுகப்பட்டியை சேர்ந்த முத்துக்காமு (வயது 55), ஜெயமங்கலம் நால்ரோடு பிரிவு அருகே மேல்மங்கலத்தை சேர்ந்த முத்தையா (45) ஆகியோர் மதுபானம் விற்றது தெரியவந்தது. இதையடுத்து 2 பேரையும் போலீசார் கைது செய்தனர். இதேபோல், ஜெயமங்கலம் பஸ் நிறுத்தம் அருகே மது விற்ற குள்ளபுரத்தை சேர்ந்த ஆறுமுகம் (40) என்பவரையும் போலீசார் கைது செய்தனர். அவர்களிடம் இருந்து 47 மதுபாட்டில்கள் பறிமுதல் செய்யப்பட்டன.