மாடி வீட்டில் இருந்து பீரோவை இறக்கியபோது மின்சாரம் பாய்ந்து 3 பேர் பலி

மாடி வீட்டில் இருந்து பீரோவை இறக்கிய போது மின்கம்பி உரசியதால் மின்சாரம் பாய்ந்து 3 பேர் பரிதாபமாக இறந்தனர்.

Update: 2022-09-22 20:44 GMT

தர்மபுரி,

தர்மபுரி சந்தைப்பேட்டை பகுதியை சேர்ந்தவர் இலியாஸ் பாஷா (வயது 75). இவருக்கு 2 மகன்கள், ஒரு மகள் உள்ளனர். இவருடைய மகன்கள் வெளியூரில் வசித்து வருகிறார்கள். இலியாஸ் பாஷா சந்தைப்பேட்டையில் பச்சியப்பன் (50) என்பவரின் வீட்டில் 2-வது மாடியில் வாடகைக்கு குடியிருந்து வந்தார். அண்மையில் அவர் கோல்டன் தெரு பகுதியில் புதிய வீடு கட்டினார். கடந்த ஒரு வாரத்துக்கு முன்பு சந்தைப்பேட்டையில் உள்ள வீட்டை காலி செய்துவிட்டு புதிய வீட்டில் குடியேறினார்.

பீரோவை இறக்கினர்

இந்த நிலையில், சந்தைப்பேட்டையில் இவர் குடியிருந்த வீட்டில் பீரோக்கள் மட்டும் இருந்தன. அந்த பீரோக்களை புதிய வீட்டுக்கு எடுத்து செல்வதற்கான பணியில் நேற்று காலையில் இலியாஸ் பாஷா ஈடுபட்டார். இதற்காக சரக்கு வேன் அங்கு வரவழைக்கப்பட்டது. இலியாஸ் பாஷா, தர்மபுரி ஆத்துமேடு பகுதியைச் சேர்ந்த வேன் டிரைவர் குமார், கோபி, வீட்டின் உரிமையாளர் பச்சியப்பன் ஆகியோர் 2-வது மாடியில் இருந்த பீரோவை கயிறுகளால் கட்டி கீழே இறக்க முயன்றனர்.

3 பேர் பலி

அப்போது எதிர்பாராத விதமாக அந்த வழியாக சென்ற மின் கம்பியில் பீரோவின் ஒரு பகுதி உரசியது. இதில் பீரோவில் பாய்ந்த மின்சாரம் அதை தூக்கி வந்த 4 பேரையும் தாக்கியது. இதில் இலியாஸ்பாஷா, அவருக்கு உதவியாக இருந்த கோபி (23), வீட்டின் உரிமையாளர் பச்சியப்பன் ஆகிய 3 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். குமார் படுகாயம் அடைந்தார்.

Tags:    

மேலும் செய்திகள்