புகையிலை பொருட்கள் விற்ற 3 பேர் சிக்கினர்
தேவதானப்பட்டி பகுதியில் புகையிலை பொருட்கள் விற்ற 3 பேரை போலீசார் கைது செய்தனர்
தேவதானப்பட்டி பகுதியில் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் விற்பனை செய்வதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. அதன்பேரில் ஜெயமங்கலம் சப்-இன்ஸ்பெக்டர் முகமது யாக்யா மற்றும் போலீசார் அந்த பகுதியில் உள்ள கடைகளில் சோதனை நடத்தினர். அப்போது குள்ளபுரத்தில் முருகேசன் (வயது 45) என்பவர் கடையில் தடை செய்யப்பட்ட புகையிலை பாக்கெட்டுகள் விற்றது தெரியவந்தது. இதையடுத்து அதனை பறிமுதல் செய்த போலீசார் அவரை கைது செய்தனர். இதேபோல், பெரியகுளத்தில் புகையிலை பொருட்கள் விற்ற ரஹமத் ராஜா (44) வீரா அப்துல்லா (45) ஆது முகமது (50) ஆகிய 3 பேரை போலீசார் கைது செய்தனர்.