கொலை மிரட்டல் விடுத்த 3 பேர் சிக்கினர்

தூத்துக்குடியில் பொதுஇடத்தில் ஒருவருக்கு கொலை மிரட்டல் விடுத்த 3 பேர் சிக்கினர்

Update: 2022-10-16 18:45 GMT

தூத்துக்குடி சிப்காட் போலீஸ் இன்ஸ்பெக்டர் சண்முகம் தலைமையிலான போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டு இருந்தனர். அப்போது, மடத்தூர் ரோடு பகுதியில் சந்தேகப்படும்படியாக நின்று கொண்டு இருந்த 3 பேரை பிடித்து விசாரணை நடத்தினர். அவர்கள் தூத்துக்குடி தபால் தந்தி காலனியை சேர்ந்த மூர்த்தி மகன் ராஜபாண்டி (23), தூத்துக்குடி ராஜகோபால் நகரைச் சேர்ந்த மாரியப்பன் மகன் மாரிதங்கம் (21), சின்னத்தம்பி மகன் அர்ஜூன் (21) என்பது தெரியவந்தது. அவர்கள் அந்த பகுதியில் வந்த ஒருவரை வழிமறித்து கேட்டு கொலை மிரட்டல் விடுத்தது தெரியவந்தது. இதனை தொடர்ந்து போலீசார் ராஜபாண்டி, மாரித்தங்கம், அர்ஜூன் ஆகிய 3 பேரையும் கைது செய்தனர்.

Tags:    

மேலும் செய்திகள்