வடமாநில தொழிலாளியிடம் செல்போன் பறித்த 3 பேர் கைது

அரக்கோணம் அருகே வடமாநில தொழிலாளியிடம் செல்போன் பறித்த 3 பேர் கைது செய்யப்பட்டனர்.

Update: 2023-10-09 18:15 GMT

அரக்கோணம் அருகே சித்தேரி பகுதியில் உள்ள தனியார் சிமெண்டு தொழிற்சாலையில் முருகன் என்பவர் வடமாநில தொழிலாளர்களை கொண்டு ஒப்பந்த வேலை செய்து வருகிறார். இவரிடம் வேலை செய்யும் வடமாநில தொழிலாளி ஒருவர் நேற்று கும்பினிபேட்டை பெட்ரோல் பங்க் அருகே சென்று கொண்டிருந்தார். அப்போது 3 பேர் அவரை தாக்கி செல்போனை பறித்து கொண்டு தப்பி சென்றனர்.

இதுகுறித்து முருகன் அரக்கோணம் தாலுகா போலீசில் புகார் அளித்தார். அதன்பேரில் அரக்கோணம் அடுத்த பாலகிருஷ்ணபுரம் பகுதியை சேர்ந்த நவீன் என்ற தென்னரசு (வயது 21), கீழ்குப்பம் பகுதியை சேர்ந்த சாரோன் பாலசந்திரன் (21). கும்பினிபேட்டை பகுதியை சேர்ந்த முனுசாமி (20) ஆகிய 3 பேரை போலீசார் பிடித்து விசாரித்ததில் செல்போன் பறித்து சென்றதை ஒப்பு கொண்டனர். இதனையடுத்து போலீசார் வழக்குப்பதிந்து 3 பேரை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்