வனப்பகுதியில் சந்தன மரக்கட்டை கடத்திய 3 பேர் கைது
வனப்பகுதியில் சந்தன மரக்கட்டை கடத்திய 3 பேர் கைது
அந்தியூர்
அந்தியூர் அருகே உள்ள பர்கூர் மலைப்பகுதி தட்டகரை வனச்சரகத்துக்குட்பட்ட போதமலை வனப்பகுதியில் உள்ள சீப்பநெட்டி ஓடை பகுதியில் வனத்துறையினர் நேற்று ரோந்து சென்றனர். அப்போது அங்கு 3 பேர் கையில் சாக்கு மூட்டையுடன் வந்துகொண்டு இருந்தனர். வனத்துறையினரை கண்டதும் அவர்கள் அங்கிருந்து தப்பி ஓட முயன்றனர். உடனே அவர்களை வனத்துறையினர் சுற்றி வளைத்து பிடித்தனர். பின்னர் பிடிப்பட்டவர்களிடம் வனத்துறையினர் விசாரணை நடத்தினர்.
விசாரணையில், 'அவர்கள் பர்கூர் மலைப்பகுதி மின்தாங்கி கிராமத்தைச் சேர்ந்த வெள்ளையன் (வயது 55), விராலிக்காட்டூர் பகுதியைச் சேர்ந்த கார்த்திக் (34) மற்றும் ஆனந்தன் (21) என்பதும், அவர்கள் 3 பேரும் வனப்பகுதியில் சந்தன மரத்தை வெட்டி சந்தனக்கட்டைகளாக ஆக்கி சாக்கு மூட்டைகளில் கட்டி வைத்து விற்பனைக்காக கொண்டு சென்றதும்' தெரியவந்தது. இதைத்ெதாடர்ந்து அவா்கள் 3 பேரையும் வனத்துறையினர் கைது செய்தனர். மேலும் அவர்களிடம் இருந்து 7 கிலோ சந்தன மரக்கட்டைகள், அரிவாள் போன்றவற்றையும் வனத்துறையினர் பறிமுதல் செய்தனர்.