கா்நாடக மாநிலத்தில் இருந்து கே.என்.பாளையத்துக்குகாரில் கஞ்சாவை கடத்திய 3 பேர் கைது

கர்நாடக மாநிலத்தில் இருந்து கே.என்.பாளையத்துக்கு காரில் கஞ்சாைவ கடத்திய 3 பேரை போலீசார் கைது செய்தனர்.

Update: 2023-03-09 20:59 GMT

டி.என்.பாளையம்

கர்நாடக மாநிலத்தில் இருந்து கே.என்.பாளையத்துக்கு காரில் கஞ்சாைவ கடத்திய 3 பேரை போலீசார் கைது செய்தனர்.

வாகன சோதனை

ஈரோடு மாவட்டம் கோபியை அடுத்த டி.என்.பாளையம் அருகே உள்ள டிஜி.புதூரில் இருந்து கே.என்.பாளையம் செல்லும் ரோட்டில் காளியூர் பிரிவு பஸ் நிறுத்தம் பகுதியில் பங்களாப்புதூர் போலீஸ் சப்- இன்ஸ்பெக்டர் சுரேஷ் தலைமையிலான போலீசார் நேற்று வாகன சோதனையில் ஈடுபட்டனர்.

அப்போது அந்த வழியாக வந்த கார் ஒன்றை போலீசார் தடுத்து நிறுத்தி சோதனையிட்டனர். சோதனையின்போது காரில் ஒரு பிளாஸ்டிக் பையில் 1 கிலோ 100 கிராம் கஞ்சா மறைக்கப்பட்டிருந்ததை போலீசார் கண்டனர்.

கைது

உடனே காரில் இருந்தவர்களை பிடித்து போலீசார் விசாரணை நடத்தினர். விசாரணையில், 'அவர்கள் சத்தியமங்கலம் ரங்கசமுத்திரம் பகுதியை சேர்ந்த மோகன் என்பவருடைய மகன் பிரபு (வயது 26), சிக்கரசம்பாளையம் மாரியம்மன் கோவில் வீதியை சேர்ந்த சண்முகசுந்தரம் என்பவருடைய மகன் ரஞ்சித் (26), டி.ஜி.புதூர் பகுதியை சேர்ந்த முத்து என்பவருடைய மகன் சதீஷ் (19) ஆகியோர் என்பதும், அவர்கள் கர்நாடக மாநிலம் ஜல்லிபாளையத்தில் இருந்து கஞ்சாவை காரில் கடத்தி கே.என்.பாளையம் பகுதியில் விற்பதற்காக கொண்டு வந்ததும்,' தெரியவந்தது. இதைத்தொடர்ந்து அவர்கள் 3 பேரையும் போலீசார் கைது செய்ததுடன், அவர்களிடம் இருந்து 1 கிலோ 100 கிராம் கஞ்சா, கடத்தலுக்கு பயன்படுத்தப்பட்ட கார் மற்றும் ரூ.8 ஆயிரம் ஆகியவற்றையும் பறிமுதல் செய்தனர். 

Tags:    

மேலும் செய்திகள்