கூழாங்கற்கள் விற்ற 3 பேர் கைது

உளுந்தூர்பேட்டை அருகே கூழாங்கற்கள் விற்ற 3 பேரை போலீசார் கைது செய்தனர்.

Update: 2023-09-25 18:45 GMT

உளுந்தூர்பேட்டை

உளுந்தூர்பேட்டை அருகே ஆரியநத்தம் பகுதியில் உள்ள விளை நிலங்களில் சட்டவிரோதமாக கூழாங்கற்கள் சலித்து விற்பனை செய்யப்படுவதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அதன்பேரில் திருநாவலூர் போலீஸ்இன்ஸ்பெக்டர் அசோகன் தலைமையிலான போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்றபோது, அங்கு போலீசாரை கண்டதும் கூழாங்கற்கள் சலித்துக் கொண்டிருந்த கும்பல் அங்கிருந்து தப்பி ஓடியது. இதில் 3 பேரை மட்டும் போலீசார் மடக்கி பிடித்தனர். விசாரணையில் அவர்கள் ஆரியநத்தம் கிராமத்தை சேர்ந்த நாகராஜன்(வயது 35), மாதவன்(35), காளிமுத்து(50) என்பதும், கூழாங்கற்களை விற்பனை செய்தவற்காக சலித்ததும் தெரியவந்தது. இதையடுத்து அவர்கள் 3 பேரையும் போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். 

Tags:    

மேலும் செய்திகள்