சாராய விற்பனையில் ஈடுபட்ட 3 பேர் கைது
சாராய விற்பனையில் ஈடுபட்ட 3 பேர் கைது செய்யப்பட்டனர்.
திருவண்ணாமலை
சாராய விற்பனையில் ஈடுபட்ட 3 பேர் கைது செய்யப்பட்டனர்.
திருவண்ணாமலை கிழக்கு போலீஸ் நிலையத்திற்கு உட்பட்ட பகுதியில் நேற்று போலீசார் சாராய ஒழிப்பு நடவடிக்கையில் ஈடுபட்டனர். அப்போது தியாகி அண்ணாமலை நகர் பகுதியில் சாராய விற்பனையில் ஈடுபட்டுக் கொண்டிருந்த அதே பகுதியைச் சேர்ந்த ஆறுமுகம் (வயது 43), டேவிட் (47), வீரக்குட்டை தெருவை சேர்ந்த பாலமுருகன் (48) ஆகிய 3 பேரை போலீசார் கைது செய்தனர். இவர்களிடம் இருந்து 165 லிட்டர் சாராயம் கைப்பற்றி கீழே கொட்டி அழித்தனர்.