வி.கைகாட்டி:
கயர்லாபாத் போலீஸ் சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் சேகர் மற்றும் போலீசாருக்கு வி.கைகாட்டி பகுதியில் மது விற்கப்படுவதாக கிடைத்த தகவலின்பேரில், அப்பகுதியில் நேற்று முன்தினம் சோதனை மேற்கொண்டனர். அப்போது குடிசல் நடுத்தெருவை சேர்ந்த குமார்(40) என்பவர் ஜி.கே.எம். நகர் சுடுகாடு பகுதியில் மது பாட்டில்களை பதுக்கி கூடுதல் விலைக்கு விற்றது தெரியவந்தது. இது குறித்து வழக்குப்பதிந்த போலீசார், குமாரை கைது செய்து அவரிடம் இருந்த மது பாட்டில்களை பறிமுதல் செய்தனர்.