மது விற்ற 3 பேர் கைது

மது விற்ற 3 பேர் கைது செய்யப்பட்டனர்.;

Update: 2023-01-13 18:45 GMT

ஊட்டி, 

ஊட்டியில் சட்டவிரோத மது விற்பனை அதிகரித்து இருப்பதாக தொடர்ந்து புகார் வந்தது. இதையடுத்து போலீசார் கடந்த சில நாட்களாக கண்காணிப்பு பணியை தீவிரப்படுத்தி உள்ளனர். இந்தநிலையில் நேற்று முன்தினம் ஊட்டி ஊரக போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் தன்ராஜ் தலைமையிலான போலீசார் அப்புகோடு பகுதியில் சந்தேகப்படும் படி நின்று கொண்டிருந்த ஒருவரை பிடித்து விசாரணை நடத்தினர். அதில் நஞ்சநாடு கிராமத்தை சேர்ந்த செல்வன் என்பதும், மதுபாட்டில்கள் விற்பனை செய்ததும் தெரியவந்தது. தொடர்ந்து அவரை போலீசார் கைது செய்தனர். இதேபோல் கோடநாடு காட்சி முனை பகுதியில் மது விற்பனை செய்து கொண்டிருந்த கோடநாடு பகுதியை சேர்ந்த ஏசுதாஸ் (வயது 51), தேனாடுகம்பை அடுத்த மொடக்கொம்பை பகுதியில் மது விற்ற கெந்தொரை பகுதியை சேர்ந்த சுரேஷ் (41) ஆகிய 2 பேரையும் போலீசார் கைது செய்தனர். மேலும் அவர்களிடம் இருந்து மதுபாட்டில்கள் பறிமுதல் செய்யப்பட்டது.

Tags:    

மேலும் செய்திகள்