மது விற்ற 3 பேர் கைது

மது விற்ற 3 பேர் கைது செய்யப்பட்டனர்.;

Update: 2023-10-24 17:58 GMT

கறம்பக்குடி போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் மார்டின் ராஜ் மற்றும் போலீசார் மஞ்சுவிடுதி, கறம்பக்குடி பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர் அப்போது மதுபாட்டில்களை பதுக்கி விற்பனை செய்த வைத்தியலிங்கம் (வயது 50), ஆசைத்தம்பி (45) ஆகிய 2 பேரை போலீசார் கைது செய்தனர். மேலும் அவர்களிடமிருந்து 40 மதுபாட்டில்கள் பறிமுதல் செய்யப்பட்டது.

அன்னவாசல் அருகே குடுமியான்மலை பகுதியில் மது விற்கப்படுவதாக அன்னவாசல் போலீசாருக்கு தகவல் கிடைத்தது. இதனையடுத்து போலீசார் குடுமியான்மலை நெல்லி ஊரணி பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது அப்பகுதியில் மது விற்பனையில் ஈடுபட்ட குடுமியான்மலை உப்புபாறைைய சேர்ந்த ராஜமாணிக்கம் (வயது 23) என்பவரை போலீசார் கைது செய்து, அவரிடமிருந்து மது பாட்டில்களை பறிமுதல் செய்தனர்.

Tags:    

மேலும் செய்திகள்