மது விற்ற 3 பேர் கைது

மது விற்ற 3 பேர் கைது செய்யப்பட்டனர்.

Update: 2023-10-09 18:46 GMT

ஆலங்குடியில் தனிப்படை போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது அங்கு மதுவிற்ற ஆலங்குடி அம்பேத்கர் நகரை சேர்ந்த குமார் (வயது 39), சிக்கப்பட்டியை சேர்ந்த காளிதாஸ் (43) ஆகிய இருவரையும் போலீசார் கைது செய்து, அவரிடமிருந்து 15 மது பாட்டில்கள், ரூ.3 ஆயிரம் ஆகியவற்றை பறிமுதல் செய்து ஆலங்குடி போலீஸ் நிலையத்தில் ஒப்படைத்தனர்.

விராலிமலை சித்திரம்பட்டியில் மதுவிற்ற அழகர் (65) என்பவரை விராலிமலை போலீசார் கைது செய்து, அவரிடமிருந்து 5 மது பாட்டில்களை பறிமுதல் செய்தனர்.

அன்னவாசல் சுற்றுவட்டார பகுதிகளில் மது விற்ற தாகேஷ் (25), பாண்டித்துரை (47), செல்லக்கண்ணு (47) ஆகிய 3 பேர் மீது அன்னவாசல் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். 

Tags:    

மேலும் செய்திகள்