போலீஸ்காரரை பணி செய்ய விடாமல் தடுத்த 3 பேர் கைது

தூத்துக்குடியில் போலீஸ்காரரை பணி செய்ய விடாமல் தடுத்த 3 பேரை போலீசார் கைது செய்தனர்.

Update: 2022-10-29 18:45 GMT

தூத்துக்குடியில் போலீஸ்காரரை பணி செய்ய விடாமல் தடுத்த 3 பேரை போலீசார் கைது செய்தனர்.

ரோந்து பணி

தூத்துக்குடி நகர துணை போலீஸ் சூப்பிரண்டு சத்தியராஜ் மேற்பார்வையில் தென்பாகம் இன்ஸ்பெக்டர் ராஜாராம் தலைமையில் சப்-இன்ஸ்பெக்டர் சிவகுமார் மற்றும் போலீசார் நேற்று முன்தினம் ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது தூத்துக்குடி தென்பாகம் போலீஸ் நிலைய எல்லைக்கு உட்பட்ட சிவந்தாகுளம் பகுதியில் சந்தேகப்படும்படியாக நின்று கொண்டிருந்த 3 பேரை பிடித்து விசாரணை நடத்தினர்.

விசாரணையில், அவர்கள் தூத்துக்குடி அய்யாசாமி காலனி பகுதியை சேர்ந்த ரவீந்திரன் மகன் ரத்னஹரிஷ் (வயது 21), தூத்துக்குடி மேல சண்முகபுரம் பகுதியை சேர்ந்த பால்ராஜ் மகன் யோகீஸ்வரன் (21), தூத்துக்குடி வண்ணார் தெருவை சேர்ந்த இளங்கோ மகன் கணேஷ் (20) என்பதும், அவர்கள் 3 பேரும் அங்கு வந்த போலீஸ்காரர் ஒருவரை அரசு பணி செய்ய விடாமல் தடுத்ததும் தெரியவந்தது.

3 பேர் கைது

உடனே போலீசார் ரத்னஹரிஷ், யோகீஸ்வரன் மற்றும் கணேஷ் ஆகிய 3 பேரையும் கைது செய்தனர். மேலும் இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

கைது செய்யப்பட்ட ரத்னஹரிஷ் மீது ஏற்கனவே தென்பாகம் போலீஸ் நிலையத்தில் திருட்டு வழக்கு உள்பட 3 வழக்குகளும், யோகீஸ்வரன் மீது முத்தையாபுரம் போலீஸ் நிலையத்தில் ஒரு வழக்கும், தென்பாகம் போலீஸ் நிலையத்தில் ஒரு கஞ்சா வழக்கும் உள்ளது குறிப்பிடத்தக்கது.

Tags:    

மேலும் செய்திகள்