பட்டாசு பதுக்கிய 3 பேர் கைது

பட்டாசு பதுக்கிய 3 பேர் கைது செய்யப்பட்டனர்.;

Update: 2023-10-08 19:31 GMT

சிவகாசி உட்கோட்டத்தில் வீடுகளில் பட்டாசுகள் தயாரிப்பதாக கிடைத்த புகாரின் அடிப்படையில் போலீசார் பல்வேறு இடங்களில் திடீர் சோதனை செய்தனர். இதில் திருத்தங்கல் திருவள்ளுவர் காலனியை சேர்ந்த கதிர்வேல் (வயது 45) என்பவர் அனுமதியின்றி வீட்டில் பட்டாசு பதுக்கி வைத்திருந்தது தெரியவந்தது. அவரை போலீசார் கைது செய்தனர். இதேபோல் திருத்தங்கல் ஆலமரத்துப்பட்டி ரோட்டை சேர்ந்த தங்கமுனியாண்டி (40) என்பவரின் வீட்டில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த பட்டாசுகளை போலீசார் பறிமுதல் செய்து அவரை கைது செய்தனர். பின்னர் ஆலமரத்துப்பட்டியில் ஒரு பட்டாசு ஆலையின் அருகில் தகர செட் அமைத்து அங்கு அருப்புக்கோட்டையை சேர்ந்த பீம்சிங் (36) என்பவர் அனுமதியின்றி பட்டாசுகளை பதுக்கி வைத்திருந்தது தெரியவந்தது. இதை தொடர்ந்து அவரை கைது செய்த போலீசார் அவரிடம் இருந்த பட்டாசுகளை பறிமுதல் செய்தனர்.

Tags:    

மேலும் செய்திகள்