பணம் வைத்து சூதாடிய 3 பேர் கைது

பணம் வைத்து சூதாடிய 3 பேர் கைது

Update: 2023-07-25 18:45 GMT

குழித்துறை:

மார்த்தாண்டம் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் வினீஷ் பாபு தலைமையிலான போலீசார் உண்ணாமலைக்கடை பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது அந்த பகுதியில் உள்ள ஒரு ரப்பர் தோட்டத்தில் சிலர் பணம் வைத்து சூதாடுவதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதையடுத்து உடனே போலீசார் அங்கு விரைந்து சென்று சூதாடியதாக அதே பகுதியை சேர்ந்த பிரைட் (வயது 51), சுனில் (38), ரதீஷ் (34) ஆகியோர் 3 பேரை மடக்கிப் பிடித்த கைது செய்தனர். மேலும், அவர்கள் சூதாட பயன்படுத்திய சீட்டுக்கட்டுகளையும் போலீசார் பறிமுதல் செய்தனர். 

Tags:    

மேலும் செய்திகள்