கடை உரிமையாளரிடம் கத்தியை காட்டி மிரட்டி பணம் பறித்த 3 பேர் கைது

கடை உரிமையாளரிடம் கத்தியை காட்டி மிரட்டி பணம் பறித்த 3 பேர் கைது செய்யப்பட்டனர்.

Update: 2023-08-13 19:08 GMT

அரியலூர் மாவட்டம் உடையார்பாளையம் முஸ்லிம் தெருவை சேர்ந்தவர் தாகீர் உசேன் (வயது 40). இவர் உடையார்பாளையம் கடைவீதியில் இருசக்கர உதிரி பாகங்கள் மற்றும் பழுது நீக்கம் கடையை நடத்தி வருகிறார். இந்தநிலையில் ஜெயங்கொண்டத்தை சேர்ந்த பஷீர் மகன் பக்ருதீன் (23), இவரது நண்பர்களான கார்த்திக் (24), அரவிந்த் (23) ஆகிய 3 பேரும் சேர்ந்து தாகீர் உசேனிடம் சென்று கத்தியை காட்டி மிரட்டி ஆயிரம் ரூபாயை பறித்தனர். மேலும் இதை யாரிடமாவது கூறினால் கொல்லாமல் விடமாட்டோம் என்று எச்சரிக்கை விடுத்ததாக கூறப்படுகிறது. இதுகுறித்து தாகீர் உசேன் அளித்த புகாரின் பேரில் உடையார்பாளையம் சப்-இன்ஸ்பெக்டர் திருவேங்கடம் வழக்குப்பதிவு செய்து உடையார்பாளையம் கடைவீதியில் நின்று கொண்டு இருந்த பக்ருதீன் உள்ளிட்ட 3 பேரையும் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்