கிராவல் மண் ஏற்றி சென்ற 3 பேர் கைது

ஜெயங்கொண்டம் அருகே கிராவல் மண் ஏற்றி சென்ற 3 பேர் கைது செய்யப்பட்டனர்.

Update: 2023-10-05 19:14 GMT

அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம் பஸ் நிலையம் அருகே கிராம நிர்வாக அலுவலர் வேல்முருகன் தனது உதவியாளருடன் சென்று கொண்டிருந்தார். அப்போது அந்த வழியாக ெசன்ற 3 டிராக்டர்களை தடுத்து நிறுத்தினார். இதனால் அதிர்ச்சியடைந்த டிரைவர்கள் சாலையோரம் டிராக்டர்களை நிறுத்தி விட்டு அங்கிருந்து தப்பி ஓடினர். இதுகுறித்து ஜெயங்கொண்டம் போலீஸ் நிலையத்தில் வேல்முருகன் அளித்த புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். விசாரணையில் டிராக்டர்களை ஓட்டி வந்தது இலையூர் கரிகாலன் மகன் கவுதமன் (வயது 22), இளையூர் கண்டியங்கொல்லையை சேர்ந்த ரத்தினசாமி மகன் ராஜேஷ் (22), மனக்கரையை சேர்ந்த கண்ணன் மகன் தினேஷ்குமார் (25) ஆகியோர் என்பது தெரியவந்தது. இதையடுத்து தப்பி ஓடிய அவர்கள் 3 பேரையும் போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்