சங்ககிரி:-
சங்ககிரி அருகே வளையசெட்டிபாளையம் பகுதியை சேர்ந்த ராமசாமி (வயது 73) என்பவர் வீட்டில் கடந்த 2013-ம் ஆண்டு நுழைந்த மர்மநபர்கள், அவரை தாக்கி வீட்டில் இருந்த 5½ பவுன் நகை மற்றும் பணத்தை கொள்ளையடித்து சென்றனர். இதுதொடர்பான புகாரின் பேரில் சங்ககிரி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர்.
இந்த கொள்ளை தொடர்பாக எடப்பாடி புதுப்பாளையம் சக்திவேல் (32), அதே ஊரை சேர்ந்த வேலுசாமி (35), வேம்பனேரியை சேர்ந்த மணி ஆகிய 3 பேரை கைது செய்து சங்ககிரி கோர்ட்டில் ஆஜர்படுத்தினர். அவர்களிடம் இருந்து மீட்கப்பட்ட நகை, பணம், செல்போன் கோர்ட்டில் ஒப்படைக்கப்பட்டது. இந்த வழக்கை விசாரித்த நீதிபதி எஸ்.ஆர்.பாபு, சக்திவேல், வேலுசாமி, மணி ஆகியோருக்கு தலா 8 மாதம் ஜெயில் தண்டனை விதித்து தீர்ப்பு கூறினார்.