தனியார் பஸ் மோதியதில் 3 பேர் படுகாயம்

தனியார் பஸ் மோதியதில் 3 பேர் படுகாயமடைந்தனர்.

Update: 2022-11-20 18:43 GMT

அன்னவாசல் அருகே குறுஞ்சாவல் பகுதியை சேர்ந்தவர்கள் ஒய்வுபெற்ற சத்துணவு ஊழியர் கருப்பையா (வயது 61), முத்துக்கருப்பன் (54), மற்றொரு கருப்பையா (67) ஆகிய 3 பேரும் முக்கண்ணாமலைப்பட்டி ஊராட்சி மன்ற கட்டிடம் எதிரே உள்ள டீக் கடையில் நின்று டீ குடித்து கொண்டு இருந்ததாக கூறப்படுகிறது. அப்போது அன்னவாசலில் இருந்து முக்கண்ணாமலைப்பட்டி வழியாக திருச்சி சென்ற தனியார் பஸ் எதிர்பாராதவிதமாக டீ குடித்து கொண்டிருந்த 3 பேர் மீது மோதியதாக கூறப்படுகிறது. இதில் 3 பேரும் படுகாயமடைந்தனர். பின்னர் அருகில் இருந்தவர்கள் 3 பேரையும் மீட்டு சிகிச்சைக்காக முக்கண்ணாமலைப்பட்டி அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் அனுமதித்தனர். பின்னர் மேல்சிகிச்சைக்காக புதுக்கோட்டை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதுகுறித்து அன்னவாசல் போலீசார் தனியார் பஸ் டிரைவர் திருச்சி நாகமங்கலத்தை சேர்ந்த மணிவண்ணன் (34) என்பவர் மீது வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்