பெண் உள்பட 3 பேர் தற்கொலை

Update: 2022-12-09 19:20 GMT

வெவ்வேறு சம்பவத்தில் பெண் உள்பட 3 பேர் தற்கொலை செய்து கொண்டனர்.

பேன்சி கடை

மண்ணச்சநல்லூர் அருகே உள்ள பாப்பாத்தி குளத்தைச் சேர்ந்தவர் கோபி (வயது 27).இவர் மண்ணச்சநல்லூரில் உள்ள ஒரு காம்ப்ளக்சில் பேன்சி கடை வைத்து நடத்தி வந்தார். இவருக்கு திருமணமாகி புனிதவள்ளி என்ற மனைவியும், ஒரு மகனும், ஒரு மகளும் உள்ளனர்.

இந்நிலையில் வியாபாரத்தில் சரிவர வருமானம் இல்லாததால் கோபி பல இடங்களில் கடன் வாங்கியதாக கூறப்படுகிறது. இதனையடுத்து வாங்கிய கடனை திருப்பித் தர முடியாத நிலையில் மன விரக்தியில் இருந்த கோபி நேற்று வீட்டில் சேலையால் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். இது குறித்த புகாரின் பேரில்

மண்ணச்சநல்லூர் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் அருண்குமார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

பெண் தற்கொலை

உப்பிலியபுரத்தை அடுத்த வைரிசெட்டிப்பாளையம் காட்டுக்கொட்டகையை சேர்ந்தவர் செந்தில்குமார். இவரது மனைவி உமாதேவி (29). இவர்களுக்கு லத்திகா (8) என்ற மகளும், ரக்‌ஷன் (4) என்ற மகனும் உள்ளனர்.

தலைவலியால் அவதி அடைந்து வந்த உமாதேவி சம்பவத்தன்று எலி பேஸ்ட் (விஷம்) தின்று மயங்கி கிடந்தார். இதை கண்ட குடும்பத்தினர் அவரை மீட்டு திருச்சி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவர் சிகிச்சை பலன் இன்றி இறந்தார். இது குறித்த புகாரின் பேரில் உப்பிலியபுரம் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் பிரகாஷ் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.

மற்றொரு சம்பவம்

சோமரசம்பேட்டை அருகே உள்ள மருதண்டா குறிச்சி மேலகுடித் தெருவை சேர்ந்தவர் சின்னத்துரை (வயது 40). உணவு குழாய் பாதிப்பிற்கு உள்ளாகி அவதி அடைந்து வந்தார். மேலும் இதற்காக மாதந்தோறும் ரூ.15 ஆயிரம் செலவு ஆனது. இதனால் விரக்தி அடைந்த அவர் நேற்று வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். . இது குறித்த புகாரின் பேரில் சோமரசம்பேட்டை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்