மது விற்ற பெண் உள்பட 3 பேர் கைது
மது விற்ற பெண் உள்பட 3 பேர் கைது செய்யப்பட்டனர்.
ஜெயங்கொண்டம்:
அரியலூர் மாவட்டம், ஜெயங்கொண்டம் அருகே தண்டலை கண்டியங்கொல்லை பகுதிகளில் பதுக்கி வைத்து மது விற்பனை செய்யப்படுவதாக கிடைத்த ரகசிய தகவலின்பேரில் ஜெயங்கொண்டம் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர்கள் செல்வகுமார், நாகராஜன் ஆகியோர் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது அங்கு பதுக்கி வைத்து மது பாட்டில்களை விற்பனை செய்த கண்டியங்கொல்லை கிராமத்தை சேர்ந்த பரமசிவத்தின் மனைவி ஜெயம் (வயது 32), தண்டலை கிராமத்தை சேர்ந்த சுப்பிரமணியன் மகன் கொளஞ்சி (32)மற்றும் மங்களம் கிராமத்தை சேர்ந்த ஆதிமூலம் (41) ஆகியோரை கைது செய்தனர். மேலும் அவர்கள் விற்பனைக்காக வைத்திருந்த 52 மது பாட்டில்களை பறிமுதல் செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.