விபசாரம் செய்த பெண் உள்பட 3 பேர் கைது
விபசாரம் செய்த பெண் உள்பட 3 பேர் கைது செய்யப்பட்டனர்.;
மணப்பாறை:
மணப்பாறையில் உள்ள ஒரு வீட்டில் விபசாரம் நடைபெறுவதாக மணப்பாறை மகளிர் போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அதன்பேரில் இன்ஸ்பெக்டர் பாலகிருத்திகா சம்பவ இடத்திற்கு சென்று விசாரணை நடத்தினார். அப்போது கரூர் மாவட்டம், சேர்வைகாரன்பட்டியை சேர்ந்த பானுமதி(வயது 50) என்பவர், பெண்களை வைத்து விபசாரம் செய்தது தெரியவந்தது. இதையடுத்து அவரை கைது செய்த போலீசார், மேலும் இந்த சம்பவம் தொடர்பாக மைலம்பட்டியை சேர்ந்த அமீர்(23), சல்மான்கான்(24) ஆகியோரையும் கைது செய்து, சிறையில் அடைத்தனர்.