ஊராட்சி துணை தலைவரின் கணவர் உள்பட 3 பேர் கைது

தண்ணீர் தொட்டியால் ஏற்பட்ட பிரச்சினையில் ஊராட்சி துணை தலைவரின் கணவர் உள்பட 3 பேர் கைது செய்யப்பட்டனா்.

Update: 2022-08-12 15:32 GMT

உளுந்தூர்பேட்டை:

உளுந்தூர்பேட்டை அருகே உள்ள சிறுபாக்கம் கிராமத்தை சேர்ந்தவர் அரசன்(வயது 65). தொழிலாளியான இவரது வீட்டின் அருகே ஊராட்சி நிர்வாகத்திற்கு சொந்தமான தண்ணீர் தொட்டி உள்ளது. இந்த தண்ணீர் தொட்டியை அங்கு இருப்பவர்கள் குளிப்பதற்காகவும், துணி துவைப்பதற்காகவும் பயன்படுத்தி வந்துள்ளனர். இதனால் அரசன் வீட்டின் முன்பு கழிவு நீர் தேங்கியது. எனவே தண்ணீர் தொட்டியை அகற்றக்கோரி அரசன் நோட்டீசு ஒட்டினார். இது பற்றி கேட்டதால் ஊராட்சி துணை தலைவரின் கணவர் சங்கருக்கும், அரசனுக்கும் வாக்குவாதம் ஏற்பட்டது, இதில் இரு தரப்பினரும் ஒருவரை ஒருவர் தாக்கிக் கொண்டனர். இது குறித்து இருதரப்பினரும் கொடுத்த புகாரின் பேரில் உளுந்தூர்பேட்டை போலீசார் வழக்குப்பதிவு செய்து சங்கர், இவரது தம்பி வி.அரசன் மற்றும் சண்முகம் ஆகியோரை கைது செய்தனர்.

Tags:    

மேலும் செய்திகள்