ஆசிரியர்களை தாக்கிய தம்பதி உள்பட 3 பேர் கைது
ஆசிரியர்களை தாக்கிய தம்பதி உள்பட 3 பேர் கைது செய்யப்பட்டனர்.
சோழவந்தான்,
சோழவந்தான் அருகே உடன்காடுபட்டி கிராமத்தில் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி உள்ளது. இப்பள்ளி வளாகத்தை அதே கிராமத்தை சேர்ந்த படிவு, இவரது மனைவி கருப்பாயி, அக்காள் நல்லம்மாள் ஆகியோர் வயலுக்கு செல்வதற்கு நடைபாதையாக பயன்படுத்தி வந்தனராம். தற்போது பள்ளிக்கு சுற்றுச்சுவர் அமைக்கப்பட்டுள்ளதால் அவர்கள் சுவர் ஏறி குதித்து சென்றதாக கூறப்படுகிறது. இதனை பள்ளி தலைமை ஆசிரியர் கண்டித்துள்ளார். இதனால் ஆத்திரம் அடைந்த 3 பேரும் சேர்ந்து தலைமை ஆசிரியர் மற்றும் ஆசிரியர்களை தாக்கியதாக கூறப்படுகிறது. இதுகுறித்த புகாரின் பேரில் விக்கிரமங்கலம் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் முருகேசன் வழக்குப்பதிவு செய்து படிவு, கருப்பாயி, நல்லம்மாள் ஆகியோரை கைது செய்தார்.