தம்பதி உள்பட 3 பேர் காயம்
மோட்டார் சைக்கிள்கள் மோதிய விபத்தில், தம்பதி உள்பட 3 பேர் காயம் அடைந்தனர்.;
வடமதுரை அருகே உள்ள பில்லமநாயக்கன்பட்டியை சேர்ந்தவர் கணேசன் (வயது 25). அவருடைய மனைவி வினோதினி (23). கடந்த 26-ந்தேதி இவர்கள், ம.மூ.கோவிலூர் பிரிவில் இருந்து பில்லமநாயக்கன்பட்டி செல்லும் சாலையில் மோட்டார் சைக்கிளில் சென்று கொண்டிருந்தனர்.
அப்போது, பில்லமநாயக்கன்பட்டியை சேர்ந்த சிவக்குமார் என்பவர் ஓட்டி வந்த மோட்டார் சைக்கிள் அவர்கள் மீது பயங்கரமாக மோதியது. இதில் தூக்கி வீசப்பட்ட 3 பேரும் படுகாயம் அடைந்தனர். கணேசன், வினோதினி ஆகியோருக்கு திண்டுக்கல்லில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. மதுரை அரசு மருத்துவமனையில் சிவக்குமார் சிகிச்சை பெற்று வருகிறார். இந்த விபத்து குறித்து வடமதுரை போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் கிருஷ்ணவேணி வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.