உடும்பை வேட்டையாடிய தந்தை-மகன் உள்பட 3 பேர் கைது

உடும்பை வேட்டையாடிய தந்தை-மகன் உள்பட 3 பேர் கைது செய்யப்பட்டனர்.

Update: 2023-08-14 18:33 GMT

தமிழ்நாடு வனம் மற்றும் வன உயிரின குற்றங்கள் கட்டுப்பாட்டு பிரிவின் மதுரை மாவட்டத்தை சேர்ந்த வனக்காப்பாளர்கள் பெரம்பலூர் மாவட்டத்தில் ரோந்து சென்றனர். அப்போது ஆலத்தூர் தாலுகா, ஜெமீன் ஆத்தூர் செல்லியம்மன் கோவில் அருகே உடும்பை வேட்டையாடி கொண்டிருந்த அரியலூர் மாவட்டம், பொய்யூரை சேர்ந்த பெரியசாமி (வயது 50), அவரது மகன் அய்யப்பன் (27) மற்றும் திருச்சி மாவட்டம், லால்குடி தாலுகா, சரடமங்கலத்தை சேர்ந்த பிச்சை பிள்ளையின் மகன் பாக்கியராஜ் (31) ஆகிய 3 பேரை பிடித்து பெரம்பலூர் மாவட்ட வனத்துறையினரிடம் ஒப்படைத்தனர். அவர்களிடம் இருந்து 3 உடும்புகள் கைப்பற்றப்பட்டன. இது தொடர்பாக வனத்துறையினர் வழக்குப்பதிந்து 3 பேரையும் கைது செய்து சிறையில் அடைத்தனர்.

Tags:    

மேலும் செய்திகள்