புகையிலை பொருட்கள்- கஞ்சா விற்றதாக பெண் உள்பட 3 பேர் கைது

கோவில்பட்டியில் புகையிலை பொருட்கள்- கஞ்சா விற்றதாக பெண் உள்பட 3 பேரை போலீசார் கைது செய்தனர்.

Update: 2022-12-24 18:45 GMT

கோவில்பட்டி:

கோவில்பட்டி பாரதி நகர், கிருஷ்ணா நகர் பகுதியில் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள், கஞ்சா விற்பனை நடைபெறுவதாக, மேற்கு போலீஸ் இன்ஸ்பெக்டர் கிங்ஸ்லி தேவானந்திற்கு ரகசிய தகவல் கிடைத்தது.

இதையொட்டி சப்-இன்ஸ்பெக்டர் ஹரி கண்ணன், பாண்டியராஜ், சரவணகுமார் மற்றும் போலீசார் பாரதி நகர் பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது 4-வது தெருவில் உள்ள பெட்டிக்கடையில் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் 180 பாக்கெட் இருந்ததை கண்டுபிடித்து பறிமுதல் செய்தனர். இதனை விற்பனை செய்ததாக துரை என்பவர் மனைவி பாக்கியலட்சுமி (வயது 43) என்பவரை கைது செய்தனர்.

அதைத் தொடர்ந்து கிருஷ்ணா நகர் பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்ட போலீசார், சந்தேகப்படும்படி நின்று கொண்டிருந்த சம்பாகுளம் கிராமத்தை சேர்ந்த துரைப்பாண்டி மகன் மதன்ராஜ் (19), பழங்கோட்டை கிராமத்தை சேர்ந்த கிருஷ்ணமூர்த்தி மகன் வசந்தகுமார் (19) ஆகியோரிடம் இருந்து 50 கிராம் கஞ்சாவை கைப்பற்றினர். பின்னர் அவர்கள் இருவரையும் போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

Tags:    

மேலும் செய்திகள்