கல்லூரி மாணவர் உள்பட 3 பேர் தற்கொலை

நெல்லை மாவட்டத்தில் வெவ்வேறு சம்பவங்களில் கல்லூரி மாணவர் உள்பட 3 பேர் தற்கொலை செய்து கொண்டார்.

Update: 2022-10-03 21:47 GMT

திசையன்விளை:

திசையன்விளையை அடுத்த அப்புவிளை காமராஜர் நகரை சேர்ந்தவர் ராஜன். இவருடைய மகன் ஜோஸ்வா (வயது 21). கல்லூரி மாணவரான இவர் அடிக்கடி செல்போனில் கேம் விளையாடி உள்ளார். இதை அவரது தந்தை கண்டித்துள்ளார். இதனால் வாழ்க்கையில் வெறுப்படைந்த ஜோஸ்வா தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்து திசையன்விளை போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் செல்வராஜ் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.

மானூர் அருகே உள்ள களக்குடியைச் சேர்ந்தவர் மாரியப்பன் (வயது 25). இவரது மனைவி ஸ்ரீநதி (21). இவர்களுக்கு ஒரு ஆண் குழந்தை உள்ளது. இந்்த நிலையில் மாரியப்பனின் குடும்ப கோவில் விழாவுக்கும், புதிய கட்டிட கிரகப்பிரவேச விழாவுக்கும் ஸ்ரீநதியின் தந்தை வரவில்லையாம். இதனால் மன உளைச்சலில் இருந்த ஸ்ரீநதி கடந்த மாதம் 18-ந்தேதி தனது உடலில் மண்எண்ணெய் ஊற்றி தீ வைத்துக் கொண்டார். இதில் பலத்த தீக்காயம் அடைந்த அவரை சிகிச்சைக்காக பாளையங்கோட்டை அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி அவர் நேற்று பரிதாபமாக இறந்தார். இதுகுறித்த புகாரின் பேரில், மானூர் போலீசார் வழக்குப்பதிவு செய்தார். மேலும் நெல்லை உதவி கலெக்டர் விசாரணை நடத்தி வருகிறார்.

மானூர் அருகே உள்ள ராமையன்பட்டி- ராஜகோபாலபுரத்தை சேர்ந்தவர் புதுராஜா. கொத்தனார். இவருடைய மனைவி அன்னபூரணம் (வயது 38). இவர்களுக்கு காயத்ரி (18) என்ற மகளும், பேச்சிப்பாண்டி (14), பிரபாகரன் (13) என்ற 2 மகன்களும் உள்ளனர். இந்த நிலையில், அன்னபூரணம் நீண்ட நாட்களாக வயிற்று வலியால் அவதிப்பட்டு சிகிச்சை பெற்று வந்ததாக கூறப்படுகிறது. இதனால் மனமுடைந்த அவர் நேற்று காலை வீட்டில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்து தகவல் அறிந்த மானூர் போலீசார் சம்பவ இடத்துக்கு வந்து அவரது உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக பாளையங்கோட்டை ஐகிரவுண்டு அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இதுகுறித்து வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்