திருட்டு வழக்கில் சிறுவன் உள்பட 3 பேர் கைது

திருட்டு வழக்கில் சிறுவன் உள்பட 3 பேர் கைது செய்யப்பட்டனர். அவர்களிடம் இருந்து 10 மோட்டார் சைக்கிள்கள் பறிமுதல் செய்யப்பட்டன.

Update: 2022-07-01 19:59 GMT

ஜீயபுரம்,ஜூலை.2-

திருட்டு வழக்கில் சிறுவன் உள்பட 3 பேர் கைது செய்யப்பட்டனர். அவர்களிடம் இருந்து 10 மோட்டார் சைக்கிள்கள் பறிமுதல் செய்யப்பட்டன.

மோட்டார் சைக்கிள்கள் திருட்டு

ஜீயபுரம் மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் மோட்டார் சைக்கிள்கள் அடிக்கடி திருட்டு போயின. இது தொடர்பாக பல்வேறு புகார்கள் ஜீயபுரம் போலீஸ் நிலையத்துக்கு வந்தன. இதனையடுத்து மோட்டார் சைக்கிள் திருடர்களை பிடிக்க போலீசார் தீவிர நடவடிக்கை மேற்கொண்டனர். இந்த நிலையில் குழுமணி பகுதியில் உள்ள ஒரு கடையில் பொருத்தப்பட்டு இருந்த கண்காணிப்பு கேமராவில் பதிவான காட்சிகளை வைத்து விசாரணை நடத்தியதில் மோட்டார் சைக்கிள் திருட்டில் ஈடுபட்டது

குழுமணி மூலங்குடி மேலதெருவை சேர்ந்த கார்த்திக் (வயது 19), அக்ரஹாரம் பகுதியை சேர்ந்த வேலன் (19) மற்றும் 17 வயது சிறுவன் என தெரியவந்தது. இதனையடுத்து போலீசார் அந்த 3 பேரையும் கைது செய்து விசாரணை நடத்தினர். விசாரணையில் அவர்கள் ஜீயபுரம், சோமரசம்பேட்டை, மண்ணச்சநல்லூர் உள்ளிட்ட பல்வேறு இடங்களில் 10 மோட்டார் சைக்கிள்களை திருடியது தெரியவந்தது. இதனையடுத்து 10 மோட்டார் சைக்கிள்களையும் போலீசார் பறிமுதல் செய்தனர்.

Tags:    

மேலும் செய்திகள்