விபத்தில் 3 பேர் சாவு: கார் டிரைவருக்கு 3 ஆண்டு சிறை-ஆத்தூர் கோர்ட்டு தீர்ப்பு
விபத்தில் 3 பேர் பலியான வழக்கில் கார் டிரைவருக்கு 3 ஆண்டு சிறை தண்டனை விதித்து ஆத்தூர் கோர்ட்டு தீர்ப்பு கூறியது.
ஆத்தூர்:
கடலூர் மாவட்டம் ஆலங்குடியை சேர்ந்த 5 பேர் கடந்த 2015-ம் ஆண்டு சேலம் மாவட்டம் ஆத்தூருக்கு காரில் சுற்றுலா வந்தனர். பின்னர் அவர்கள் வடசென்னிமலை முருகன் கோவிலுக்கு சென்றனர். வழியில் வீரகனூர் அருகே உள்ள நல்லூர் பகுதியில் கார் சாலை ஓரத்தில் இருந்த மரத்தில் மோதியது. இதில் காரில் பயணம் செய்த 3 பேர் பரிதாபமாக இறந்தனர். 2 பேர் காயம் அடைந்தனர். வீரகனூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து, கார் டிரைவரான விக்னேஷ் குமார் (வயது 27) என்பவர் மீது வழக்குப்பதிவு செய்தனர். இந்த வழக்கு விசாரணை ஆத்தூர் குற்றவியல் நடுவர் கோர்ட்டு எண் 1-ல் நடந்து வந்தது. அப்போது கவனக்குறைவாகவும், அஜாக்கிரதையாகவும் காரை இயக்கி, விபத்தை ஏற்படுத்திய டிரைவர் விக்னேஷ் குமாருக்கு 39 மாதங்கள் சிறை தண்டனையும், ரூ.5 ஆயிரத்து 500 அபராதமும் விதித்து தீர்ப்பு கூறப்பட்டது.