லாட்டரி சீட்டுடன் 3 பேர் கைது
சிவகிரியில் லாட்டரி சீட்டுடன் 3 பேர் கைது செய்யப்பட்டனர்
சிவகிரி:
சிவகிரி போலீஸ் இன்ஸ்பெக்டர் (பொறுப்பு) சண்முகசுந்தரம் உத்தரவின்பேரில் பயிற்சி சப்- இன்ஸ்பெக்டர் ராஜவேல், சப்-இன்ஸ்பெக்டர் முருகேசன், சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் நவமணி ஆகியோர் தலைமையில் போலீசார் சிவகிரி பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர்.
அப்போது சந்தேகத்திற்கிடமாக நின்று கொண்டிருந்த சிவகிரி தெற்கு தெருவைச் சேர்ந்த பொன்னையா மகன் பழனிசாமி (வயது 68), பெரிய பிள்ளையார் கோவில் தெருவைச் சேர்ந்த திருமலைக்குமார் மகன் பரமசிவன் (58), கிருஷ்ணசாமி மகன் முத்துசாமி (68) ஆகியோரை பிடித்து சோதனையிட்டனர். அதில், வெளி மாநிலத்தைச் சேர்ந்த லாட்டரி சீட்டுகள் 200 இருப்பது தெரியவந்தது. அவற்றை போலீசார் பறிமுதல் செய்தனர். 3 பேரையும் கைது செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.