7 கிலோ கஞ்சாவுடன் 3 பேர் கைது

நாகர்கோவிலில் 7 கிலோ கஞ்சாவுடன் 3 பேர் கைது

Update: 2023-01-14 18:45 GMT

நாகர்கோவில், 

நாகர்கோவிலில் 7 கிலோ கஞ்சாவுடன் 3 பேர் கைது செய்யப்பட்டனர்.

கஞ்சா விற்பனை

நாகர்கோவில் வடசேரி போலீசார் நேற்று ஆலம்பாறையில் ரோந்து சென்றனர். அப்போது அங்கு சந்தேகப்படும் படியாக சுற்றித்திரிந்த 3 பேரை பிடித்து போலீசார் விசாரணை நடத்தினர். அப்போது அவர்கள் கோட்டார் வாகையடி தெருவை சேர்ந்த சொரிமுத்து (வயது 21), கோட்டாரை சேர்ந்த தனுஷ் (23), ஆலம்பாறை அழகர்கோணத்தை சேர்ந்த மணிவண்ணன் (29) என்பதும், அவர்கள் கஞ்சா விற்றதும் தெரியவந்தது.

3 பேர் கைது

இதைத் தொடர்ந்து அவர்களை போலீசார் கைது செய்து போலீஸ் நிலையம் அழைத்து சென்று கிடுக்குப்பிடி விசாரணையை மேற்கொண்டனர். அப்போது 3 பேரும் சுமார் 7 கிலோ கஞ்சாவை வீடுகளில் பதுக்கி வைத்திருந்தது தெரியவந்தது. இதனையடுத்து வீடுகளில் அதிரடி சோதனை நடத்தி அந்த கஞ்சாவை பறிமுதல் செய்தனர்.

இந்த கஞ்சா விற்பனை செய்த விவகாரத்தில் கோட்டார் பகுதியை சேர்ந்த 4 பேருக்கு தொடர்பு இருப்பதாக கூறப்படுகிறது. ஆனால் போலீசார் தேடுவதை அறிந்த 4 பேரும் தலைமறைவாகி விட்டனர். எனவே அவர்களை போலீசார் தேடி வருகிறார்கள்.

Tags:    

மேலும் செய்திகள்