கஞ்சா கடத்திய 2 வாலிபர்கள் உள்பட 3 பேர் கைது

கஞ்சா கடத்திய 2 வாலிபர்கள் உள்பட 3 பேர் கைது செய்யப்பட்டனர்.

Update: 2022-10-10 17:19 GMT

பேரணாம்பட்டு டவுன் நெடுஞ்சாலை பகுதியில் முஹம்மத் பர்கான் (வயது 25) என்பவர் நடத்தி வரும் பெட்டிக்கடையில் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் விற்றதாக கடந்த சில நாட்களுக்கு முன்பு வருவாய்த் துறையினர், முஹம்மத் பர்கான் கடையை பூட்டி சீல் வைத்தனர். இந்த நிலையில் மீண்டும் முஹம்மத் பர்கான் தனது கடையில் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்களை விற்பதாக பேரணாம்பட்டு போலீசாருக்கு தகவல் கிடைத்தது.

அதன் பேரில் போலீஸ் இன்ஸ்பெக்டர் ராஜன் பாபு, சப்- இன்ஸ்பெக்டர் தேவபிரசாத் மற்றும் போலீசார் முஹம்மத் பர்கானின் கடையை சோதனையிட்டதில் ரூ.15 ஆயிரம் மதிப்புள்ள சுமார் 7½ கிலோ எடையுள்ள குட்கா, பான் மசாலாவை பறிமுதல் செய்து முஹம்மத் பர்கானை கைது செய்தனர்.

இதனையடுத்து பேரணாம்பட்டு அருகே உள்ள பத்தலப்பல்லி கிராமத்தில் போலீஸ் சோதனை சாவடி அருகில் குடியாத்தம் மது விலக்கு அமலாக்கப்பரிவு போலீஸ் இன்ஸ்பெக்டர் கிருஷ்ணவேணி மற்றும் போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது ஆந்திர மாநிலத்திலிருந்து மோட்டார் சைக்கிளில் கஞ்சா கடத்தி வந்த பத்தலப் பல்லி கிராமத்தை சேர்ந்த ரவி (22), பிரகாஷ் (22) ஆகிய 2 பேரை கைது செய்து, சுமார் 100 கிராம் எடையுள்ள கஞ்சா, மோட்டார் சைக்கிளை பறிமுதல் செய்தனர்.

Tags:    

மேலும் செய்திகள்