குண்டர் சட்டத்தில் 3 பேர் கைது

குண்டர் சட்டத்தில் 3 பேர் கைது செய்யப்பட்டனர்.

Update: 2023-08-12 21:24 GMT


மதுரை கீரைத்துறை மேலத்தோப்பு பகுதியை சேர்ந்தவர்கள் சதீஷ்குமார் (வயது24), சரவணன் (22), காமராஜர்புரம் திரு.வி.க. தெருவை சேர்ந்தவர் மணிகண்டன் (22). இவர்கள் 3 பேர் மீதும், பல்வேறு போலீஸ் நிலையங்களில் கொலை மற்றும் கொலை முயற்சி வழக்குகள் நிலுவையில் உள்ளன. இந்தநிலையில், இவர்கள் பொதுமக்களுக்கும், பொது அமைதிக்கும் குந்தகம் விளைவிக்கும் வகையில் தொடர்ந்து நடந்து கொண்டது தெரியவந்தது. இதையடுத்து இவர்கள் 3 பேரையும், தென்மண்டல ஐ.ஜி.யும், மதுரை (நகர் கூடுதல் பொறுப்பு) போலீஸ் கமிஷனருமான நரேந்திரன் நாயர் குண்டர் சட்டத்தில் கைது செய்ய உத்தரவிட்டார். இதைத்தொடர்ந்து அவர்களை குண்டர் சட்டத்தில் போலீசார் கைது செய்தனர். 

Tags:    

மேலும் செய்திகள்