கோவில் மணியை திருடிய 3 பேர் கைது
கூத்தாநல்லூர் அருகே கோவில் மணியை திருடிய 3 பேர் கைது செய்யபட்டனர்
கூத்தாநல்லூர்:
கூத்தாநல்லூர் அருகே உள்ள கமலாபுரத்தை அடுத்துள்ள அரிவளூர் கிராமத்தில் இரட்டை விநாயகர் கோவில் உள்ளது. இக்கோவிலில் உள்ள 4 கிலோ எடை கொண்ட பித்தளை கோவில் மணியை நேற்று முன்தினம் மாலை மோட்டார் சைக்கிளில் வந்த 3 பேர் திருடிக் கொண்டு தப்பிச்்செல்ல முயன்றனர். இதனை கண்ட அப்பகுதி பொதுமக்கள் 3 பேரையும் விரட்டி சென்று சுற்றிவளைத்து பிடித்து வடபாதிமங்கலம் போலீசாரிடம் ஒப்படைத்தனர். அவர்களிடம் போலீஸ் இன்ஸ்பெக்டர் முருகேசன் விசாரணை நடத்தினார். விசாரணையில், அவர்கள் மாவூர் மேலப்பாலையூர் கிராமத்தை சேர்ந்த மனோஜ் (வயது 20), வருண்ராஜ் (20), திருநெய்ப்பூர் முகமது அசாருதீன் என்பது தெரியவந்தது. பின்னர், அவர்கள் 3 பேர் மீதும் போலீசார் வழக்குப்பதிவு செய்து கைது செய்தனர்.