ஆடுகள் திருடிய 3 பேர் கைது

பண்ருட்டி அருகே ஆடுகள் திருடிய 3 பேர் கைது செய்யப்பட்டனர்.

Update: 2023-02-18 18:37 GMT

பண்ருட்டி, 

பண்ருட்டி அடுத்த பேர்பெரியான்குப்பத்தை சேர்ந்தவர் ஏழுமலை. இவருக்கு சொந்தமான 2 ஆடுகள் கடந்த சில நாட்களுக்கு முன்பு திருடுபோனது. இதுகுறித்த புகாரின்பேரில் முத்தாண்டிக்குப்பம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். இந்த நிலையில் காடாம்புலியூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் ராஜதாமரை பாண்டியன், முத்தாண்டிக்குப்பம் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் ரவிச்சந்திரன் மற்றும் போலீசார் வடலூர் ஆட்டு சந்தைக்கு சென்று சோதனை நடத்தினர். அப்போது அங்கு சந்தேகப்படும்படியாக நின்று கொண்டிருந்த 3 பேரை போலீசார் பிடித்து விசாரித்தனர். விசாரணையில் அவர்கள் பேர்பெரியான்குப்பத்தை சேர்ந்த பெருமாள் மகன் அசோக் குமார்(வயது 22), கருக்கை மற்றும் கீழ்காங்கேயன்குப்பத்தை சேர்ந்த 17 வயதுடைய 2 சிறுவர்கள் என்பதும், இவர்கள் ஏழுமலைக்கு சொந்தமான 2 ஆடுகளை திருடி சந்தையில் விற்க முயன்றதும் தெரியவந்தது. இதையடுத்து அசோக்குமார் உள்பட 3 பேரை கைது செய்த போலீசார், அவர்களிடமிருந்த 2 ஆடுகள் மற்றும் மோட்டாா் சைக்கிள்களை பறிமுதல் செய்தனர்.



Tags:    

மேலும் செய்திகள்